Perambalur the Government Higher Secondary School, the district-wide science fair
பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான 44 -வது அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் இன்று(15.10.16) தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 89 பள்ளிகளை சேர்ந்த 178 மாணவர்கள் தங்களின் 137 படைப்புகளை காட்சிப் படுத்தினர்.
இதில், மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சிப் பணியாளர் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றின் மூலம் சமுதாயத்திற்கு ஏற்படபக்கூடிய நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே கேட்டறிந்தார். மேலும் நாம் உருவாக்கக்கூடிய அனைத்து படைப்புகளும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பயன்பட வேண்டும்.
படிக்கும் வயதில் இத்தகைய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க பெரிதும் உறுதுணையாக இருந்த உங்களின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சிப் பணியாளா தெரிவித்தார்.
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் நாளில் இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கும்,
இன்றைய அறிவியல் கண்காட்சியில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான பிரிவில் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மனிதர்களை பாதுகாத்தல் படைப்பு முதலிடத்தையும்,
பெரம்பலூர் புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் அறிவியல் தொழில் நுட்பம் படைப்பு இரண்டாம் இடத்தையும்,
பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட மாசுக்கட்டுபாடு தொடர்பான படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது.
9 மற்றும் 10 ம் வகுப்பிற்கான பிரிவில் பெரம்பலூர், தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட மரபு சாரா எரிசக்தி தொடர்பான படைப்பு முதலிடத்தையும்,
எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் தொடர்பான படைப்பு இரண்டாமிடத்தையும்,
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர;ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட எளிய குளிர்சாதணம் தொடர்பான படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது.
11 மற்றும் 12 வகுப்பு பிரிவில் தேனூர், அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை முறை கொசுவர்த்தி தொடர்பான படைப்பு முதலிடத்தையும்,
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான படைப்பு இரண்டாமிடத்தையும்,
அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட மாடி தோட்டம் தொடர்பான படைப்பு மூன்றாமிடத்தையும் பெற்றது. வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.