Perambalur: The Higher Education Guidance Program is conducted in 2 phases; Collector Info!
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன் உயர்வுக்குப் படி எனும் திட்டத்தின் கீழ், கடந்த 2 கல்வி ஆண்டுகளில், பிளஸ்2 படித்து, உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்களின் கல்லூரி கல்வியை உறுதி செய்யும் வகையில் 2 கட்டங்களாக உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, செப்.10 அன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். 2ம் கட்டமாக செப்.20 அன்று நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
உயர்கல்வியை தொடர இயலாத மாணவ, மாணவிகளின் சூழ்நிலைகளை உணர்ந்து, அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவது, வங்கி கடன் ஏற்பாடு செய்து உதவி அளிப்பது. எதிர்கால கல்வியை பற்றி முடிவு செய்வதற்கான தகவல்களை அளிப்பது. பொருளாதாரத்தை மேம்படுத்தி பணத்தை ஈட்டும் வகையில் கற்பதற்கு உரிய படிப்புகள், புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குதல், அரசு விடுதி சேர்க்கை குடும்ப ஆலோசனை வழங்குதல் மற்றும் உயர்கல்விக்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ் முகாமிலேயே வழங்குதல், தேவைப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழியாக மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுதல், போன்றவற்றை முகாம் நடைபெறும் இடத்திலேயே மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில், உயர்கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளையும் முகாம் நடைபெறும் இடத்திலேயே வரவழைத்து ஒருங்கிணைந்து செயல்பட்டு. உயர்கல்வி வழியாக மாணவர்களின் குடும்ப பொருளாதாரத்தை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்கள் உயர்கல்வி பற்றிய சரியான தகவல், கல்வி கட்டணம், விருப்பப்படும் படிப்பு சேருவதற்கு ஏற்ப மாற்று வாய்ப்புகள் பற்றி அறிந்துக்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்முகாமானது 2 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், முதல் முகாமில் பங்கேற்காதோர் இரண்டாவது முகாமில் கண்டிப்பாக பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவியர்கள் இம்முகாமினை பயன்படுத்தி உயர்கல்வி பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்