Perambalur: The leg of the criminal who tried to escape during the police vehicle check was broken!
பெரம்பலூர் மாவட்டம், வாலிண்டபுரம் கிராம பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் தனிப்டை போலீசார் சின்னாறு பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வந்த வாலிபர் போலீசாரைக் கண்டவுடன் தப்ப முயன்று சின்னாறு பாலத்திலிருந்து குதித்தார். அப்போது காயமாக வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இடது காலில் எலும்பு முறிவும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சரித்தர பதிவேடு குற்றவாளி என்றும், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரகாஷ் (30) என்பதும்,
வாலிகண்டபுரம் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.