Perambalur: The lorry involved in sand robbery without government permission was seized!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரியை குன்னம் போலீசார் பறிமுதல் செய்தார்.

ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக குன்னம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் எஸ்ஐ.சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை அதன் டிரைவர், போலீசாரை கண்டதும் நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஸ்டாலின் (46). என்பதும், அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் ஜெமீன் ஆத்தூர் பகுதியில் இருந்து சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 8 யூனிட் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து, குன்னம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டிரைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!