Perambalur: The love couple who got married despite their parents’ opposition, took shelter in the police station!

பெரம்பலூர்: இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு வழங்க கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று தஞ்சமடைந்தனர்

பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டாபுதூர் கிராமம், பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்-கமலா தம்பதியினரின் மூத்த மகன் சுபாஷ்(21). பிஎஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுபாஷ் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்-மலர் தம்பதியனரின் மகளான விஜயலக்ஷ்மி (21). பிஎஸ்சி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ள விஜயலக்ஷ்மி கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுபாஷும்- விஜயலட்சுமியும் படித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷும்- விஜயலட்சுமியும் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு இன்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்திற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!