Perambalur: The married couple sought protection and took shelter at the women’s police station!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் – அகிலாண்டம் தம்பதியினர். இவர்களது மகன் தினகரன் (27). பிபிஏ படித்த பட்டதாரி. இவர் கோயம்புத்தூரில் உள்ள கேஸ் கம்பனியில் வேலை பார்த்தது வந்தார். அதே கம்பனியில், மதுரை திருநகரை சேர்ந்த ஹரி ஆனந்த் மகள் பவித்ரா (24). பி.காம் பட்டதாரியான இவரும் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்த நிலையில், வெவ்வேறு சமூகம் என்பதால், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இருவரும் ஶ்ரீரங்கத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மகளிர் போலீசார் இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்து, மணமக்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதை எடுத்துக் கூறி, சமதானம் செய்து வைத்து, பின்னர், மணமக்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
காதலுக்கு ஜாதி, மதம் கிடையாது என்பதை தாண்டி மாதம் கூட இல்லை என இந்த காதல் திருமணம் நீருபித்துள்ளது.