Perambalur: The municipal president and staff waited for an hour for the collector to arrive!
இன்று காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் கிரேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில், நகராட்சி ஊழியர்கள் 5 மாலை வாங்கிக்கொண்டு காலை 9.30 மணியில் இருந்து வெயிலில் காத்துக் கொண்டிருந்தனர். கலெக்டர் கிரேஸ் வருவார் வருவார் என வெயிலில் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள். அரசியல் கட்சியினர் போல், அதிகாரிகளும் நடந்து கொள்வது ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.