Perambalur: The person involved in the sexual abuse of children was arrested under the POCSO Act!
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவனும், 9ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவனும் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளனர். இரு சிறுவர்களும் நேற்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றனர்.
நேற்று மதியம் சுமார் 12.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோட்டாத்துர் கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் கிருஷ்ணகுமார் (52). திருமணம் ஆகாதவர். இவர் அந்த இரு சிறுவர்களுக்கு டியூசன் சொல்லித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் தற்போது வாடகைக்கு தங்கியிருக்கும் தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ணகுமார் தனது அறையில் வைத்து சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், சிறுவர்கள் சத்தம் போட்டனர். அருகில் இருந்த பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிருஷ்ணகுமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அறிந்து அவரை தாக்கினர். தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகுமாருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண் 705/24 u/s 3 (d), 4 POCSO சட்டப்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணகுமாரை இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு ஆனப்பி வைத்தனர்.