Perambalur: The person who asked to vacate the house was stabbed! Police arrested 2 people!!
பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மதராசா ரோட்டில் உள்ள மாரிமுத்து என்வரது வீட்டில், கோனேரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் லோகேஸ் (18) வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவரது நண்பர்களான பெரம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த பாண்டியன் மகன் எலி @ வெங்கடேசன் (21) மற்றும் ஆலம்பாடி ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் விக்ரம் (21) ஆகிய இருவரும் குடித்து கும்மாளம் போட்டுள்ளனர். அதனால் லோகேஷை வீட்டை காலிசெய்து தரும்படி கூறியுள்ளார்.
இன்றும் வழக்கம் போல் மாலை 6 மணிக்கு வெங்கடேசன், விக்ரம் இருவரும் குடிபோதையில் லோகேஷின் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரிமுத்துவின் அண்ணன் ராஜுவின் மகன் மாயக்கண்ணன் (45) அவரது நண்பர் ரஞ்சன்குடியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் அய்யாசாமி இருவரும் வீட்டை காலி செய்து கொடுங்கள் இவ்வாறு ஏன் சத்தம் போடுகிறீர்கள் என கேட்டனர்.
வெங்கடேசன், விக்ரம் இருவரும் மாயக்கண்ணனையும் அய்யாசாமியையும் தகாத வார்த்தையால் திட்டியதோமு அவர்கள் வைத்திருந்த கம்பி, கத்தி, பாட்டிலால் தாக்கினர். இதில் மாயக்கண்ணனுக்கு உதட்டிலும், அய்யாசாமிக்கு தலை, முதுகு, இரண்டு கை மணிக்கட்டு பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டது.
இருவரையும் அங்கிருந்தவர் அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார், தப்பிய தலைமறைவான வெங்கடேஷ், விக்ரம் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில், இளம் வயது இளைஞர்களின் போக்கு நாளுக்கு மோசமாகி வருவதால் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.