Perambalur: The person who died in the accident will get Rs. 15 lakh compensation insurance company!
பெரம்பலூர் அருகே விபத்தில் பலியானவர் ரூ.300க்கு காப்பீடு எடுத்திருந்ததால், நியூ இந்திய அஷ்யூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக காப்பீடு தொகை ரூ.15 லட்சம் வழங்கியது.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் ரகுபதி. கடந்த ஆக. 10 அன்று அரும்பாவூர் – மலையாளப்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக எதிரே வந்த 4 சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளனாதில், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் நியூ இந்திய அஷ்யூரன்ஸ் கம்பனியில் ரூ. 300க்கு விபத்து பாலிசி எடுத்தது தெரியவந்ததையடுத்து, அவருக்கு அந்நிறுவனம், காப்பீட்டுத் தொகையான ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை ரகுபதி மனைவி மேகனாவிடம், முதுநிலை கிளை மேலாளர் ஆர். தினேஷ், உதவி மேலாளர் ஏ.என். ரெங்கராஜன், ஏஜன்ட் ஜி.கே.ராமதாஸ் மற்றும் அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆ.மலர்க்கொடி ஆனந்தன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.