Perambalur: The person who made fake voter card was arrested
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்பியூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெருவை சேர்ந்த பேரூரை சேர்ந்த சலீம் பாஷா மகன் முகமது சமீம் (33) என்பவர் SSS என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் 18 வயதை நிறைவடைந்ததால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்க வாக்களர் அடையாள அட்டையை பதிவு செய்து உள்ளார். 3 மாதமாகியும் அட்டை வராததால், கம்பியூட்டர் சென்டரில் சென்று கேட்டுள்ளார். முகமது சமீம் உடனடியாக வாக்காளர் அட்டையை தயார் செய்து கொடுத்துள்ளார்.
இதனை கொண்டு சாஜித் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளார். பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, சாஜித்தின் வாக்காளர் அட்டை போலி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறு ஏதேனும் அரசு ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளனர். பின்னர், தபாலில் வந்த வாக்காளர் அட்டையை கொடுத்துள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முதலில் கொடுத்த வாக்காளர் அட்டை போலி என தெரிவித்தனர். இது குறித்து, லப்பைக்குடிக்காடு வி.ஏ.ஓ ஐயப்பனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஐயப்பன் மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் முஹமது சமீம் கடையை ஆய்வு செய்ததில், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வீரன் (47), என்பவர் பக்ரைன் நாட்டில் இருந்து, தனது மனைவி விஜயலட்சுமி மூலம் பாஸ்போர்ட்டை போலி வாக்களர் அட்டை விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது.
Cr No: 330/2024 u/s 318(2), 318(4), 336(3),340(2) BNS கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.