Perambalur: The person who possessed 2 kg of banned gutka was arrested!
பெரம்பலூர் வடக்குமாதவி மேட்டுத்தெரு பகுதியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை விசாரணை நடத்தியதில்,
1 கிலோ ஹான்ஸ் (07 பண்டல் -150 பாக்கெட்கள் -Rs.1550) கூல் லிப் 500 கிராம் (04 பண்டல் – 80 பாக்கெட்கள் -Rs.320 ) விமல் பான் மசாலா 500 கிராம் (10 பண்டல் – 150 பாக்கெட்கள் –Rs1500) என மொத்தம் ரூபாய்.3370 மதிப்புள்ள 2 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ஜெயலாணி மகன் ஷேக் அப்துல்லா (50) என்பதும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசர், வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து மேற்படி 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்டுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா, குட்கா,கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.