Perambalur: The person who sold the banned lottery tickets was arrested!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ வரதராஜன் தலைமையிலான குழுவினர் சோதனையிட்டனர். அப்போது, வாட்டர் டேங்க் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தவரை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், குரும்பலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (48), என்பதும் அவரிடமிருந்து 3 இலக்க எண் கொண்ட வெள்ளை சீட்டுகள் 4 -யை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.