Perambalur: The police arrested the bike thief and sent him to jail!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை வெங்கடேசன் மகன் சீனிவாசன். இவர் தனது பைக்கை வீட்டின்முன் நிறுத்திவிட்டு அடுத்தநாள் காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து அரும்பாவூர் போலீசில் கடந்த நவ. 6-ந்தேதி புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசன் தலைமையிலான குழுவினர் பூலாம்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக பைக்கில் வந்த பூலாம்பாடியை சேர்ந்த சாமிதுரை மகன் மணிகண்டன் (30), இவனிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாகவும், மணிகண்டன் ஓட்டி வந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லாமல் இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் வாகனத்தில் போலியான நம்பர் பிளேட் பொருத்தி பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அந்த பைக் பூலாம்பாடியை சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமானது என தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து நீதிமன்றத்தல் நேர்நிறுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.