Perambalur: The police held a meeting of the village-level child protection committee in Veppanthattai!
பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பி.மருதமுத்து மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் வனிதா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர்தென்றல், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகர் சுமதி, மற்றும் வேப்பந்தட்டை சேர்மன் ராமலிங்கம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில், கிராம அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு (Village level Child Protection Committee Meeting -VLCPC) கூட்டம் நடத்தினர்.
இதில் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி குறித்தும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு மற்றும் எய்ட்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், Women Help Desk 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் போக்சோ சட்டம் 2012 சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை புகார் எண் 10581 DAD (Drive Against Drugs in Perambalur ) உதவி எண் 18004259565 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.