Perambalur: The police registered a case against the person who filed a false complaint to take revenge!

யுவராஜ் File Copy

பெரம்பலூர் அருகே வாகனத்தை மறித்து ஓட்டுனரை தாக்கி விட்டு 10 லட்ச ரூபாயை திருடி சென்றதாக பொய் புகார் கொடுத்தவர் போலீசார் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மொரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் யுவராஸ் (41). இவர் கடந்த 24ம் தேதி செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்ய பிக்கப் வேனில் சென்றார். வேன் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் அருகே வந்த போது மர்ம நபர்கள் மறித்து தாக்கி அவர் எடுத்து வந்த 10 லட்சத்தை பறித்துக் கொண்டு, அவரை கத்தியால் கீறியதாக பெரம்பலூர் புகார் கொடுத்திருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், யுவராஜ், சம்பவ இடத்தின் அருகே நின்றிருந்த திருநங்கைகளிடம் உல்லாசமாக இருந்த போது, போதையில் வந்த இளைஞர்கள் சிலர் யுவராஜிடம் ரூ. 100 -யை மிரட்டி பிடுங்கிய தகராறில், யுவராஜிக்கு காயம் ஏற்பட்டதும், அவர்கள் திருடவில்லை என்றும் போலீசார் கைது செய்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக யுவராஜ் இடம் போலீசார் நடத்திய விசாரணையில் 10 லட்சம் பணம் எடுத்து வரவில்லை என்பது தெரியவந்தது. அவர் கொண்டு வந்தது 5 ரூபாய் நாணயமாக ரூ.1,25,000/-, 3 பைகளிலும், 2 ரூபாய் நாணயமாக ரூ.30.000/- 2 பைகளிலும், மொத்தம் ரூ.1,55,000/- தான் கொண்டு வந்ததும் தெரியவந்தது. யுவராஜை தாக்கியவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசில் புகார் கொடுத்ததும் தெரிய வந்தது.

யுவராஜ் நடந்த சம்பவத்தை மறைத்து உண்மைக்கு மாறாக பொய் புகார் கொடுத்தது தெரியவே, பெரம்பலூர் நீதிமன்ற நடுவர் எண் 1 , உத்தரவின் பெயரில் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்த யுவராஜின் மேக்ஸ் பிக்கப் (TN19 BV 6897 ) என்ற 4 சக்கர வாகனத்தை சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!