Perambalur: The police rescued the child laborers who worked in the shop and sent them to school!
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ராணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திமருதமுத்து டிசிபிஓ சட்ட ஆலோசகர் கோபிநாத் ஆகியோர் இணைந்து கடைகள் மற்றும் கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, குன்னம் கடைவீதியில் ஒரு மெக்கானிக் கடையில் பணியில் இருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டு குழந்தைகள் நல அலகில் ஒப்படைத்தனர்.
அவர்கள் கல்வி பயில் உரிய நடவடிக்கை மாவட்ட அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.