Perambalur: The ruling party councilor walked out protesting the pending work and staged a dharna protest on the ground!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் இன்று தலைவர் சங்கீதா ரமேஷ் தலைமையில் மாதந்திர கூட்டம் நடந்தது. அதில், அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது குரும்பலூர் 7வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், தனது பகுதியில் டெண்டர் விடப்பட்டும் பணிகள் கிடப்பில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. அதிகாரிகள் மெத்தன போக்காக இருப்பதாகவும், மக்கள் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவில்லை என கூறி குரும்பலூர் பேரூராட்சி அலுவலத்திலேயே துண்டை விரித்து போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், தலைவர் சங்கீதா உள்ளிட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தியோடு, விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அவரை அழைத்து சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், எதிர் கட்சியினர், கூட்டணி கட்சியினர் அமைதி காத்து வரும் நிலையில், ஓட்டு போட்ட மக்களுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் செல்வராஜ் தர்ணா போராட்டம் நடத்தியது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது.