Perambalur: The son who worshiped the body of the mother who committed suicide as she would be resurrected also hanged herself: it was revealed because of the stench!


பெரம்பலூர் ரோவர் ஆர்ச் சாலையில், முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழகிய நிலையில் 78 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் சடலமும், 35 வயது மதிக்கத்தக்க தூக்கில் தொங்கிய ஒரு ஆணின் சடலமும் கடப்பதை கண்டறிந்தனர்.

மேலும் குப்புறப் படுத்த நிலையில் இறந்த கிடந்த மூதாட்டியின் சடலத்தின் அருகே எலுமிச்சை பழம், தர்ப்பைப்புல் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் உள்ளிட்ட மசாலா பொருட்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இரண்டு சடலங்களும் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவக் குழு மூலம் சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு, இறந்து போன இருவரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இறந்து போனார்கள்? என அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்து போனவர்கள் காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட சர்வானந்தம் என்பவரின் மனைவி ஆனந்தி(78), என்பதும், இவரது ஒரே மகன் ஸ்ரீராம்(34), என்பதும் தாயும் மகனும் கடன் பிரச்சினையால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூரில் வாடகைக்கு குடியேறி நிலையில் வெவ்வேறு பகுதிகளில் குடியிருந்து வந்த இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சம்பவம் நிகழ்த்த செல்வராஜின் வீட்டிற்கு வாடகைக்கு குடியேறியுள்ளனர்.

புகைப்படக் தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீராம் திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் டிசைனராக வேலை பார்த்து வந்த நிலையில்,
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தாயார் ஆனந்தியை பராமரித்து கவனிப்பதற்காக நாள்தோறும் வேலைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி வழக்கம் போல் ஸ்ரீராம் வேலைக்கு சென்று இருந்த நிலையில், சர்க்கரை நோயால் கால் முழுவதும் புண்ணாகி வேதனைகள் துடைத்து வந்த மூதாட்டி ஆனந்தி எறும்பு பவுடரை சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் டைரி ஒன்றில் தான் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், தன் இறப்பிற்குப் பின்னர் எவ்வித வருத்தமும் கொள்ளாமல் வழக்கமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள ஸ்ரீராமுக்கு அறிவுரை வழங்கி மரண வாக்கு மூலம் எழுதி வைத்துள்ளார்.

வேலை முடிந்த பின்னர் வீடு திரும்பிய ஸ்ரீராம் கதவை திறந்து பார்த்ததும் தாய் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர் மீது கொண்ட பாசத்தால் எப்படியாவது உயிர்த்தெழுவார் என வெற்றிலை பாக்கு சூடம் எலுமிச்சம்பழம் தர்ப்பைப்புல் மிளகாய் உள்ளிட்ட பூஜை பொருட்களையும், மஞ்சள் பொடி, மல்லி பொடி உள்ளிட்ட மசாலா பொருட்களையும் தூவி கடந்த ஒரு வாரமாக இறந்த தாயின் சடலத்திற்கு பூஜை செய்து வந்த நிலையில், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து ஸ்ரீராம் கடந்த இரண்டு- மூன்று தினங்களுக்கு முன்னர் கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு, வீட்டினுள் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.

மூதாட்டியும் அவரது மகனும் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி இருக்கிறது.
துர்நாற்றத்தை உணர்ந்த பொதுமக்கள் பெருச்சாளி ஏதும் செத்திருக்கலாம், எனக் கருதிய நிலையில், தொடர் நாற்றம் மூக்கைத் துளைக்க போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மேற்கொண்ட விசாரணையில் இந்த உயிரிழப்பு சம்பவம் 10 நாட்களுக்குப் பிறகு தெரிய வந்திருக்கிறது.

உயிரிழந்த தாய் உயிர்த்தெழுவார் என செய்த பூஜை தோல்வியில் முடிந்ததால், விரக்தியுற்ற மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!