Perambalur: The Sub-Collector inaugurated an awareness campaign against gender discrimination.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில், பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு இயக்க பேரணியை சப்-கலெக்டர் சு.கோகுல் பாலக்கரை பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கிருஷ்ணா திரையரங்கம் வழியாக ரோவர் வளைவு வரை சென்று முடிவடைந்தது.
குடும்ப வன்முறையை தடுப்போம், பெண் உரிமையைப் பாதுகாப்போம், பாலின சமத்துவத்தை பரப்புவோம், பெண்களை இழிவுபடுத்துவதை புறக்கணிப்போம், பெண்களை அடிப்பதும், திட்டுவதும் வன்முறை என்பதை புரிந்துகொள்வோம், ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம் வன்முறைக்கு எதிராக, பெண்களுக்கு குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குவோம், பாலின வன்முறைக்கு முடிவு கட்டுவோம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கையில் ஏந்தியவாறு நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் பெர்லினா, முருகதாஸ், கார்த்திகேயன், சங்கர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூர், டிச.12-