teenager who went to bathe in the quarry with his friends was rescued as a dead body!
பெரம்பலூர் அருகே இன்று காலை, நண்பர்களுடன் குவாரி குட்டையில் குளிக்க சென்றவரை தீயணைப்பு மீட்பு படையினர் சடலமாக மீட்பு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கவின்ராஜ் (22), இவர்கள் நண்பர்களான பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த காதர்மீரான் மகன் இஸ்மாயில் (28), அரணாரையை சேர்ந்த அங்கமுத்து மகன் ஹரீஸ் (19), பெரம்பலூர் மதனகோபலபுரம் காந்திநகரை சேர்ந்த பெரியண்ணன் மகன் பூபதி (20), ஆகிய 4 பேரும் நண்பர்கள்.
இவர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை, குவாரியில் குளிப்பதற்காக சென்றனர். பின்னர், அங்கு கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டுவிட்டு குவாரியில் உள்ள தண்ணீரில் குளித்தனர், பின்பு 4 பேரும் புறப்படும் சமயத்தில் கவின்ராஜ் மட்டும் மற்ற சென்றுவிடக் கூறி, சிறிது நேரம் குளித்துவிட்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, குவாரியில் வேறு சிலரும் குளித்துக் கொண்டு இருந்ததால், நண்பர்கள் மூவரும் கவீன்ராஜை அங்கேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று கவின்ராஜின் அம்மா இஸ்மாயிலுக்கு போன் செய்து தனது மகன் கல்யாணத்திற்கு சர்வர் வேலை செய்ய செல்வதாக கூறிச் சென்றான், போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை. தற்போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என கேட்டதற்கு, இஸ்மாயில், கவின்ராஜ் கல்யாணத்திற்கு செல்லவில்லை எங்களுடன் குளிக்க தான் வந்தான் என பதில் தெரிவித்துள்ளார்.
உடனே, நண்பர்கள் உறிவினர் பதயியடித்துக் கொண்டு கோனேரிபாளையத்தில் உள்ள குவாரிக்கு அனைவரும் சென்று பார்த்த பொழுது கவின்ராஜின் பேண்ட், சட்டை, செருப்பு ஆகியவை குவாரி ஓரத்தில் கிடந்துள்ளது, அதனை பார்த்ததும் கதறி அழுதுள்ளனர்.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கும், பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள், குவாரி தண்ணீரில் கவின்ராஜை தேடிப் பார்த்தனர். எந்தவித தடயமும் சிக்கவில்லை, மேலும் இருட்டாகி விட்டதால் மீண்டும் இன்று காலை தேடிய போது கவீன்ராஜ் உடலை கண்டெடுத்தனர். பின்னர். உடலை கைப்பற்றி போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
வாலிபர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.