Perambalur: The woman who cheated by taking a loan of 40 lakhs in the names of others and not paying it was arrested!
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் கண்ணனின் மனைவி சத்யா. இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சத்தியன் மனைவி வசந்தி என்பவர் தான் நடத்தி வந்த டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோவை விரிவு படுத்துவதற்காகவும், குடும்ப செலவிற்காகவும் சத்யா பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தரும்படியும் மாதாமாதம் தான் தவணை கட்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பிய சத்யா அவருக்கு 1,13,000/- ரூபாய் கடன் பெற்று தந்ததாகவும், மாதத் தவணையை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் தன்னை தொந்தரவு செய்வதாகவும்,
மேலும் வசந்தி அந்த கிராமத்தில் சுமார் 36 பேர்களிடம் இதே போல் வெவ்வேறு நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 37,97,880/- பெற்றுள்ளதாகவும், தான் இழந்த பணம் 1,13,000/- ஆயிரத்தையும் சேர்த்து 39,10,8880/- ரூபாயை ஏமாற்றிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டதாகவும் சத்யா மாவட்ட க்ரைம் பிராஞ்ச் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வசந்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வசந்தி உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த மாவட்ட க்ரைம் பிராஞ்ச் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைசாலைக்கு அனுப்பி வைத்தனர்.