Perambalur: Thiruvalluvar statue silver jubilee! Thirukkural dedication, speech and quiz competitions; Collector’s information!
திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை 01.01.2000 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க திருக்குறள் தொடர்பான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் வினாடி- வினா ஆகிய போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படவுள்ளன.
24.12.2024 மதியம் 2.00 மணிக்கு பேச்சுப்போட்டியும், 26.12.2024 மதியம் 2.00 மணிக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் 27.12.2024 மதியம் 2.00 மணிக்கு வினாடி வினா போட்டியும் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பேச்சு போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும் கலந்து கொள்ளலாம். திருக்குறளின் ஏதேனும் ஐந்து அதிகாரங்களை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் பொருளுணர்ந்து, உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும். பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வோர் நன்றிக்குவித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 05 நிமிடங்கள் பேச வேண்டும்.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 97863 18555 என்ற தொலைபேசி எண்ணிலோ 22.12.2024 ஞாயிற்று கிழமை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்துகொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5,000/-,ரூ.3,000/-, ரூ.2,000/- வீதம் 31.12.2024 அன்று நடைபெற உள்ள நிறைவு விழாவில் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80123 73957 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.