Perambalur: Those who sold banned lottery tickets online were arrested!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பாலக்கரை பகுதிக்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையின் எஸ்.எஸ்.ஐ-க்கள் ரமேஷ், .சிவக்குமார், மற்றும் அவரது குழுவினர் சோதனையில் ஈடுட்டபோது அரும்பாவூர் பாலக்கரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றுக் கொண்டிருந்த அ.மேட்டூரரை சேர்ந்த பெருமாள் மகன் முத்துக்குமார் (31) , மற்றும் அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முருகேசன் (47) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கேரள ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களை அரும்பாவூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். அரும்பாவூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிற்றரசன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தில் சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.