Perambalur: To make Vijay the CM in 2026 elections, we must strive hard with unity; TVK General Secretary Bussy Anand!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்-யை ஆட்சியில் அமர வைக்க தொண்டர்கள் இன்னும் 18 மாதங்கள் ஒற்றுமையோடு இருந்து கடுமையாக பாடுபட வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெரம்பலூரில் தெரிவித்தார்
பெரம்பலூரில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உலகமே தமிழக வெற்றி கழகத்தினர் இந்த மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உற்று நோக்கி வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பதில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என தெரிவித்தார்.
யார் என்ன சொன்னாலும் சரி தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் தளபதி தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் தளபதி தான் என தெரிவித்த அவர் இன்னும் தேர்தலுக்கு 18 மாதங்கள் மட்டுமே உள்ளதாகவும், 2026ல் அந்த இடத்தில் தளபதியை உட்க்கார வைப்பதறக்கு நாம் உழைக்க வேண்டும் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். நல்ல விஷயங்களுக்கு நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தவர் சாலையில் செல்லும் 10 கார்களில் எட்டு கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது நமது தளபதி தான் என்றும் இனி வரும் காலங்களில் இது போன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கும் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் வரும் 16, 17,23,24ஆம் தேதியில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை திருத்தம் முகாங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும் எனவும் இது போன்ற விஷயங்களுக்கு மக்களுக்கு உதவுவதோடு மக்களோடு மக்களாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் தளபதி வர உள்ளதாகவும் தெரிவித்த அவர் அப்போது, மக்கள் நம் கட்சியினர் செய்த உதவிகளை அவரிடம் தெரிவிக்கும் வகையில் உதவ வேண்டும் என தெரிவித்தார். அதுபோன்று அரசு நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு அதில் உள்ள நமக்கு தெரியாத விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இன்னும் 16 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து தமிழக வெற்றி கழகத்தினர் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தளபதி படத்தை வைத்து உள்ளாட்சிகளில் 127 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் துணைத் தலைவர் வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் தற்போது கட்சியாக ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் என திராலானோர் கலந்து