Perambalur: Toll free number to get free legal aid at Legal Services Commission; Notice!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், இலவச சட்ட உதவி மற்றும் உதவி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ், பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வளாகம் ஆகியவற்றில் இலவச சட்ட உதவி மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் கட்டணமில்லா உதவி எண் 15100 உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் பலகையை திறந்து வைத்தார்.
மேலும், (https://www.nalsa.gov.in/lsms) என்ற இணைய முகவரியை பயன்படுத்தியும் இலவச சட்ட உதவி மற்றும் உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.