Perambalur: Training completion ceremony for those selected for the District Police Home Guard! SP participates!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஊர்க்காவல் படை காவலர்களுக்கு கடந்த 05.01.2026 முதல் 02.03.2026 வரை 45 நாட்கள் அடிப்படை கவாத்து பயிற்சிகள் மற்றும் இதர பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழா பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

இதில், கலந்து கொண்ட போலீஸ் எஸ்.பி அனிதா கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் பேசியதாவது: ஊர்க்காவல் படை காவலர்களுக்கு பணியில் ஒழுக்கம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும் என்றும், சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் காவல்துறையினர்க்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் எஸ்.பி பாலமுருகன், மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி சுப்பையன், ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி ஜெ.அரவிந்தன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!