Perambalur: Tuberculosis must be conquered just like COVID-19; Collector speaks at the launch of the ‘TB-Free Movement’.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், காசநோய் இல்லா இயக்கம் மற்றும் ஜோஷ் துவக்க விழா கலெக்டர் ப.அப்துல் ராசிக் தலைமையில் நடந்தது. இதில் 47 ஊராட்சிகளுக்கு காசநோய் இல்லா இந்தியா பாராட்டு சான்றிதழ்களையும், காசநோய் ஒழிப்பு பணிகளில் சிறப்பாக பங்களித்து வரும் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் மை – பாரத் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கிய, கலெக்டர் காச நோய் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் படி, காசநோய் இல்லா இந்தியா-2030 என்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின், இலக்கின் முதல் படியாக கடந்த 2025-ஆம் ஆண்டு 20 சதவீத காசநோய் பாதிப்பு குறைந்த 28 ஊராட்சிகளுக்கு வெண்கல பதகத்திற்கான சான்றிதழ்களும், 20 40 சதவீதம் காசநோய் பாதிப்பு குறைந்த 19 ஊராட்சிகளுக்கு வெள்ளி பதகத்திற்கான சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

ஆரம்ப நிலையில் காசநோயை கண்டறிவது மற்றும் காசநோயாளிகள் முற்றிலும் குணமடைவது இரண்டும் தான் காசநோய் ஒழிப்பின் முக்கியமான பங்கு. இதன் மூலம் காசநோய் பரவுதலை தடுக்க முடியும். Uncontrolled சர்க்கரை வியாதி மற்றும் மது பழக்கம் காசநோய்க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல் அவசியமாகிறது. மது மற்றும் போதையின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்துவது. பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோய் பணியாளர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று விழிப்புணர்வுவை ஏற்படுத்துகிறார். பண நடமாடும் எக்‌ஸ்- ரே வாகனம் மூலம் வாரம் ஒரு வட்டாரம் என்ற அடிப்படையில் முன்பயண திட்டம் திட்டமிடப்பட்டு டி.பி ஸ்கீரினிங் பணி நடந்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை போல் காசநோயையும் வென்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் வி.ராஜசெல்வம், மாவட்ட சுகாதார அலுவலர் எம். கீதா, துணை இயக்குநர் (காசநோய்) ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் மாணவர்கள், என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மற்றும் மை – பாரத் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!