Perambalur: Two youths arrested for selling ganja!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாடாலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் நிதியரசன் (19), வீரமணி மகன் மகேஸ்வரன்(22) என்பதும், அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.