Perambalur: Unable to do public work; Panchayat leaders petition Collector demanding release of funds!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட15வது நிதி குழு மானிய நிதி கடந்த 4 மாதங்களாக விடுவிக்கப்படாமல் உள்ளதால் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால், உடனே, அந்த நிதியை விடுவிக்க கோரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டருக்கு மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளையும் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு 15 வது நிதி குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், தற்போது மழைக்காலத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள் தேக்கமடைந்து வருவதால், ஒதுக்கப்பட்ட நிதியினை உடனடியாக நிர்வாக அனுமதி கொடுத்து விடுக்க வேண்டும்.

மேலும், தங்களது பதவி காலம் முடிய உள்ள நிலையில் மக்களுக்கு நிறைவான பணிகளை செய்து கொடுத்து விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதினால் நிதியை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கணிமவள நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் நிதி வழங்காததால் கிராமங்களில் நடைபெற்று வரும் பல பணிகள் விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்கள் இதுகுறித்து ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

அப்போது, மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கவுள்பாளையம் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன்,செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட15வது நிதி குழு மானிய நிதி கடந்த நான்கு மாதங்களாக விடுவிக்கப்படாமல் உள்ளதால் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால் உடனே அந்த நிதியை விடுவிக்ககோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளையும் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு 15 வது நிதி குழு சார்பில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் தற்போது மழைக்காலம் என்பதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேக்கமடைந்துள்ளது.எனவே ஒதுக்கப்பட்ட நிதியினை உடனடியாக நிர்வாக அனுமதி கொடுத்து விடுவித்திட வேண்டும். மேலும், தங்களது பதவி காலம் முடிய உள்ள நிலையில் மக்களுக்கு நிறைவான பணிகளை செய்து கொடுத்து விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதினால் நிதியை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கணிமவள நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் நிதி வழங்காததால் பணிகள் விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்கள் இதுகுறித்து கலெக்டரை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

கலெக்டர் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த காரணத்தால், முகாம் அலுவலக நேர்முக உதவியாளர்களிடம் மனு கொடுத்து விட்டு, கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

போனில் பேசிய கலெக்டர் பரீசிலிப்பதாக தெரிவித்தார். ஊராட்சித் தலைவர்கள் அன்னமங்கலம் மருதாம்பாள் செல்வக்குமார், வாலிகண்டபுரம் கலியம்மாள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்களின் கணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!