Perambalur: “Ungalai Thedi Ungal Ooril” camp in Veppanthattai taluk; Collector Information!
தமிழக முதலமைச்சரால், அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் மூன்றாவது புதன் கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும்,மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ஆகஸ்டு மாதத்திற்கான முகாம், 21.08.2024 புதன்கிழமை அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் தங்கி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர்.
வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.