Perambalur: Ungalai Thedi Ungal Ooril ; Special Camp for Patta Change; Collector info!
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்றும் வருகின்றார்கள்.
இந்நிலையில் நாளை (20.11.2024) “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட சிறப்பு முகாம் பெரம்பலூர் வட்ட அளவில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமின்போது பட்டா மாறுதலுக்கான முகாம்களும் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் குறுவட்டங்களில் உள்ள பெரம்பலூர்- பெரம்பலூர் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குரும்பலூர் – வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடத்திலும் ”சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள்” நடைபெற உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் பத்திரம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து ”சிறப்பு பட்டா மாற்ற முகாம்” சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.