சம்பவம் காலை :
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ் நகரை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி கமலா ( வயது 55) . இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் அவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வாலிபர்கள் 2 பேர் கமலாவின் கழுத்தில் அணிந்து இருந்த பத்தரை பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அதற்கு கமலா சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் தப்பித்து ஓடி விட்டனர். இது குறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையார்களை தீவிர தேடி வருகின்றனர்.
சம்பவம் மாலை :
பெரம்பலூர், ஆலம்பாடி சாலையில் பைக்கில் வந்த ஜோடியிடம் பைக்கில் 3 பேர் பைக்கை வழிமறித்து பெண் அணிந்திருந்த தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவல் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, அகிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால், அங்கு ஜோடியும், கொள்ளையர்களும் தப்பி சென்றிப்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நகையை பறிகொடுத்த ஜோடி கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.