Perambalur: Union DMK general members consultation meeting, membership card distribution ceremony!
பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார் வரவேற்றார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்களித்து கே.என். அருண்நேருவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து தி.மு.க. கிளைக் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், செ.வல்லவன், ந. ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் டிஆர்.சிவசங்கர், யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், ஒன்றிய பொருளாளர் கலையரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.