Perambalur Union Office was inaugurated by Chief Minister M. K. Stalin in a video presentation. Chairman Meena Annadurai was inaugurated by lighting the lamp.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் அரசின் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், முடிவுற்ற பணிகளை தொடக்கியும் வைத்தார். அப்போது, பெரம்பலூரில் ரூ. 4.37 கோடியில் கட்டப்பட்ட யூனியன் அலுவலகத்தை அரியலூரில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூர் யூனியன் அலுவலகத்தில், யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏவும், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளருமான எம்.ராஜ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, திமுக தொழிற்சங்க நிர்வாகி கோனேரிப்பாளையம் கே.கே.குமார் மற்றும் துணை சேர்மன் சாந்தாதேவி குமார், மற்றும் மேலாளர் ராஜலிங்கம், ஒன்றியி கவுன்சிலர்கள் மலர்க்கொடி செல்வராஜ், செல்வகுமாரி முருகேசன், ஆர்.கலையரசன், வசந்தா பாலு, அ.அருணாபாண்டியன், மு.ராஜேந்திரன், பாப்பாத்தி அசோகன், தேவகி நடராஜ், பெ.சாம்குமார், பிரியா, சக்திமுத்துசாமி, தெய்வமணி, அருண், முத்துராமன் உள்பட திமுகவை ஒன்றிய நிர்வாகிகள், திமுக கிளை பொறுப்பாளர்கள், யூனியன் ஆபீஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!