Perambalur: Unregistered Nursing Homes, Shelters, Hostels; Sealed, Collector’s Notice!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் அரசின் சட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) விதிகள் 2014 மற்றும் 2015 ஆகிய சட்டப்பிரிவின் கீழ் https://tnswp.com என்ற இணையதள முகவரியிலும், முதியோர் இல்லங்கள் ”மூத்த குடிமக்களுக்கான சட்டம் 2007”-ன்படி www.seniorcitizenhomes. tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அணுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள் ”இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015“-ன் படி https://dsdcpimms.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அனுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சிகுன்றியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் ”மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016”-ன் படி பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் மற்றும் (State Mental Health Authority) கீழ் செயல்பட்டு வரும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ”மனநல பாதுகாப்பு சட்டம் 2017”-ன் அல்லது முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம், குளம்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக தொடர்புடைய இணையதளம் (இணையதளம் (Portal) / அலுவலகம் வாயிலாக ஒருமாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது, தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!