Perambalur: UPSC – 2025 Exam Coaching for SC, ST, Category : Collector Information!
தாட்கோ முன்னெடுப்பாக டாக்டர். அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருடகாலம் யு.பி.எஸ்.சி தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை – முதன்மை நிலை பயிற்சியினை வழங்கவுள்ளது.
யு.பீ.எஸ்.சி தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணக்கர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடமாகும், விடுதியில் தங்கி படிக்க வசதியும் உள்ளது. பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.