Perambalur: Vacancy in Child Welfare Committee; Collector Information.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், குழந்தை நல குழுவில் காலியாக உள்ள உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் (ஒரு பணியிடம்) பணியிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.

குழந்தை நலக்குழுவில் உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்படிப்பு பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 01.08.2024 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.11,916/- (ரூபாய் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு மட்டும்) தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் http://Perambalur.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!