Perambalur: Vaccinated student undergoing surgery; Request to help the government!
பெரம்பலூர் மாவட்டம், சு. ஆடுதுறையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் லப்பைக்குடிகாடு அரசு துணை சுகாதார நிலையத்தின் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளியில் வீராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் – நிர்மலா இவர்களின் மகன் அர்ஜுன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் பள்ளியில் போட்ட தடுப்பூசியால் அர்ஜுனுக்கு கைவீங்கி வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு அருகில் இருந்த லப்பைக்குடிக்காடு அரசு துணை சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகத காரணத்தால் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். அங்கு மாணவன் அர்ஜுனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவனுக்கு தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் கை வீங்கி சீல் பிடித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 10 நாள் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து பள்ளி மாணவனின் பெற்றோர் மருத்துவரிடம் விசாரணை செய்த போது தடுப்பூசியை கவனக் குறைவாக போட்டதாகவும், மேலும், பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் போது செவிலியர்கள் செல்போனில் பேசிக் கொண்டே செலுத்தியதாகவும், கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நிர்வாகம் உதவி செய்து நலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசிக நிதியுதவி
விசிக வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர். மாநில இளஞ்சிறுத்தை வழக்கறிஞர் பாலா. மாவட்ட அமைப்பாளர்கள் பொன் சங்கர். அத்தியூர் மணிமாறன் . ஒன்றிய பொருளாளர் சின்னதுரை அப்போது உடனிருந்தனர்.