Perambalur: Vaccination against the disease that attacks cattle; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் ஆறாவது சுற்றாக 1,21,500 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 16.12.2024 முதல் தொடர்ந்து 21 நாட்கள் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக நடைபெறும். எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறவேண்டும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.