Perambalur: VAO suspended for accepting bribe; Sub collector orders!
பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ரூ20-ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக, ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்ட, பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் டெபுடி தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலி என பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ நல்லுசாழியை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கீழக்கரை விஏஓ நல்லுசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் சப் கலெக்டர் கோகுல் உத்தரவிட்டுள்ளார்.