Perambalur: VCK meeting resolves to sack PD Lalitha for working against Dalit leaders
பெரம்பலூர் மாவட்ட விசிக பெரம்பலூர் மேற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் அதன் மாவட்ட செயலாளர் வக்கீல் ம.க.ச.
இரத்தினவேல் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சண்முகசுந்தரம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் எ.வெற்றியழகன், மா. இடிமுழக்கம் எம். பி மனோகரன் இர.பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா மன்னர் மன்னன் , பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் ந.கிருஷ்ணகுமார், ஆகியோர் கருத்துரை வழங்கினார். மண்டல துணைச் செயலாளர் பெ.லெனின், மாநில துணை செயலாளர்கள் அண்ணாதுரை, தமிழ் குமரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டவர்கள்,
கூட்டத்தில், வரும் 15ம் தேதி, காமராஜர் பிறந்த நாளை கொண்டாடுவது, தலைவர் திருமாவளனின் தந்தை தொல்காப்பியனின் நினைவு நாளை அனுசரிப்பது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ததை வன்மையாக கண்டிப்பதோடு படுகொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து விசாரணையே இன்றி மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தொண்டமாந்துறை ஊராட்சி தொண்டபாடி ஊராட்சி வி. களத்தூர் ஊராட்சி தலித் தலைவர்கள் மீது பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை தவறாக பயன்படுத்தி அதிகாரங்களை பறித்து சாதிய கண்ணோட்டத்துடன் மிரட்டியதுடன் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் அஞ்சலி எதிராக அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் பிரிவு 205ன் கீழ் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியதை கண்டிப்பதோடு, மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவருக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தலையும் ஆதிக்கத்தையும் செலுத்தி வரும் மாவட்ட திட்ட அலுவலர் லலிதாவை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,
தலித் அல்லாத தலைவர்கள் ஊராட்சி அமைப்புகளில் பெரும் கையாடல் செய்து அதனை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட ஊராட்சித் தலைவர்களை எந்தவித பாதிப்பும் இன்றி காப்பாற்றிய பெரம்பலூர் மாவட்ட அரசு நிர்வாகம் தலித் தலைவர்களை குறிவைத்து அதிகாரத்தை பறிக்கும் செயலை செய்து வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து வருகிற 18.07.2024 தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது,
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் சாராயம், ஊர் ஊருக்கு கால நேரம் இன்றி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதையும் கஞ்சா,அபின், போன்ற போதை பொருள் தாராளமாக பெரம்பலூரில் புலங்கி வருவதால் பள்ளி மாணவ மாணவிகள் இளைஞர்கள் அனைவரும் போதைக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை தொலைத்து வருகிறார்கள் ஆகவே பெரம்பலூர் மாவட்ட காவல்துறையும் மாவட்டநிர்வாகமும் கள்ளத்தனமாக போதை பொருளை விற்கும் நபர்களை கண்டறிந்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இம்மாவட்ட நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளையராஜா நன்றி கூறினார்.