Perambalur: VCK protest demanding Z Plus protection for Dalit leaders!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வி.சி.க சார்பில், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் தலைமையில், ரெட்டைமலை சீனிவாசன் 165-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக-வினர் புகழஞ்சலி செலுத்தினர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் கோஷமிட்டு, 2 நிமிடம் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர், பின்னர், மத்திய – மாநில தலித் தலைவர்கள் அனைவருக்கும் இசட் பிளஷ் பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் நாடாளுமன்ற துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம் , பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன் , பிச்சைப் பிள்ளை, பெரம்பலூர் நகர செயலாளர் சண்முக சுந்தரம், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன், திருநாவுக்கரசு, அய்யாதுரை, மாவட்ட அமைப்பாளர் அய்யா கண்ணு, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய பொருளாளர் அ.பிச்சை பிள்ளை , மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, மாவட்ட அமைப்பாளர் முரசொலி, மாவட்ட துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், சிறுவாச்சூர் மாரிமுத்து, செல்வக்குமார், ரெங்கராஜ், நாவலூர் வெங்கடேஷ் , ஆட்டோ புஷ்பராஜ், ஆட்டோ ராஜேந்திரன், வழக்கறிஞர் சங்கர், விசுவக்குடி செல்வராஜ், அம்பேத் கோகுல், மதியழகன், கதிரவன், ஆழ்வார், துறை முருகன், வெங்கடேசன், ஜெயக்குமார், பெருமத்தூர் குடிக்காடு வெங்கடேசன், உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.