Perambalur: VCK West district level renovation consultation management meeting!
பெரம்பலூர் மாவட்டத்தின் விசிக மறு சீரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் நடந்தது. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் உதயகுமார், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள் எம் .பி மனோகரன், ர.பிச்சப்பிள்ளை மகளிர் விடுதலை இயக்கம் பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் வே.ரேணுகா வேல்முருகன், மாவட்ட பொருளாளர் ரா.செல்வாம்பாள் மாவட்ட பொருளாளர், துணைச் செயலாளர் மேரி டயானா, பெரம்பலூர் நகர செயலாளர் தங்க. சண்முகசுந்தரம், ஐயர் முன்னிலை வைத்தனர்.
மேலிட பொறுப்பாளர்கள் பா. தாமரைச்செல்வன், வீர .செங்கோலன், வெ.கடம்பன், ஆகியோர் மறு சீரமைப்பு குறித்த விளக்க உரையாற்றினர். பெரம்பலூர் மாவட்ட கிழக்கு செயலாளர் அ.கலையரசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள்
சி.தமிழ் மாணிக்கம் பெ.மு.செல்வநம்பி, நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னன், மண்டல துணைச் செயலாளர்கள் பெ.லெனின், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பாவாணன், மாநில துணை செயலாளர்கள் ராசித் அலி, தமிழ் குமரன், மா.அண்ணாதுரரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு 2024 ல் பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், பெரம்பலூர் மேற்கு ஒன்றியம், பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பெரம்பலூர் நகரம், அரும்பாவூர் பேரூர் பூலாம்பாடி பேரூர், குரும்பலூர் பேரூர், பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் அனைவரும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பொறுப்புகளுக்கு புதிதாக தமிழ்மண் சென்னை என்ற பெயரில் ரூபாய் 2000/= வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் மாநில பொறுப்புகளுக்கு ரூபாய் 2000-மும் மாவட்ட பொறுப்புகளுக்கு ஆயிரம் ரூபாயை ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் ரூ.500 -யை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வங்கி வரைவோலை எடுத்து வருகிற 20.11.2024 ஆம் தேதிக்குள் எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலிட பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் வருகிற 20.11.2024 ஆம் தேதிக்குள் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஆகிய பொறுப்புகளுக்கு பெருவாரியான அளவில் மனுக்களை பெற்று வெற்றிகரமாக மறுசீரமைப்பு பணியை முடித்து கொடுப்பது என இம்மாவட்ட ஒருங்கிணைப்பு மறு சீரமைப்பு குழு தீர்மானித்து, 20.11.2024 ஆம் தேதி மறு சீரமைப்பு மனுபெறப்படும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .