Perambalur: Vinayagar Chaturthi: Do not put up critical images, slogans, posters, banners; Police notification!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மத வழிபாட்டு இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களின் அருகில் விளம்பர பதாகைகள் நிறுவப்படுதல் தவிர்க்க வேண்டும்.
இசை இசைக்கப்படும்போது அதிக ஒலி எழுப்புதல் கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சமுதாயத் தலைவர்களை ஆதரிக்கும் பேனர்களை வைக்கக்கூடாது. சமுதாய விரோத மனநிலையில் குறிப்பிடும் வாசகங்களை முழங்குதல் மற்றும் பிற மதங்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல்கள் எவ்விதத்திலும் செய்யக்கூடாது.
மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்