Perambalur weather: Summer rains in various parts of the district today!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நண்பகலில், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சட்டென மாறிய வானிலை மாற்றத்தால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளர்ச்சியான சீதோஷ்ண நிலை நாள் முழுக்க நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அமைந்தனர். கோடையில் ஒரு குளிர் காலம் இருந்தது.
மேலும், வரும் ஆடிப்பட்டம் விதைப்பு பணியை செய்ய தற்போது பெய்துள்ள மழை உதவியாக இருக்கும் என்றும், விதைப்புக்கு முன் உழவாரப்பணிகள் செய்ய சரியான தருணம் என்தால் அடுத்து வரும் நாட்களில் பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள்.
தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால், கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடியும், சுகமாக தூங்கியும் அனுபவித்து வருகின்றனர்.