Perambalur: Who is in the PM KISSAN scheme? Who will get it? Farmers will get honorary financial assistance? Collector explains!
மத்திய அரசின் பி.எம்கிசான் (விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவித்திட்டம்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/-வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/-ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024 அக்டோபர் வரை 18 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
பி.எம்கிசான் திட்டத்தில் 01.02.2019-க்கு முந்தைய நில உரிமையாளர்கள் மட்டுமே பயனாளிகளாக இருக்க மத்திய அரசு வழி வகை செய்துள்ளது. 01.02.2019-க்கு பின் நில உரிமையாளர் இறந்திருக்கும் பட்சத்தில் அவரது வாரிசுகளுக்கு நில உரிமை மாற்றப்பட்டிருப்பின் அத்தகைய நில உரிமைதாரர்கள் பி.எம்.கிசான் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யலாம். அவர்கள் தகுதியுடைய நபர்களாக கருதப்படுவர்.
01.02.2019-க்கு பின் நில உரிமையாளர் உயிரோடு இருந்து, அவர் தனது வாரிசுகளுக்கு நில உரிமையை மாற்றினாலோ, தான செட்டில்மென்ட் செய்தாலோ அல்லது புதிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவர் நிலம் வாங்கினாலோ அவர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் அவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
மேலும், பதிவு செய்த விவசாயிகள் விடுபாடில்லாமல் தொடர்ந்து தவணைத் தொகையை பெற e-KYC (Electronic Know Your Customer) செய்ய வேண்டும். மின்னணு முறையில் திட்டப்பயனாளர்களை ஆதார் எண் மூலம் அறிந்து கொள்ளும் முறையே e-KYC ஆகும். எதிர்வரும் தவணைகளை பெற ஆதார் விவரங்களை சரிபார்ப்பது அவசியமாகும். எனவே e-KYC செய்யாதவர்கள் 3 முறைகளில் e-KYC பதிவு செய்யலாம்.
ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் PMKISAN Portal –ல் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP மூலம் பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களை அணுகி பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யலாம். வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி மத்திய அரசு வெளியிட்டுள்ள PMKISAN app மூலம் e-KYC செய்து கொள்ளலாம்.
இதே போல் இத்திட்டத்தில் தவணைத் தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கே விடுவிக்கப்படுவதால் இது வரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை அணுகி ஆதார் எண்ணை இணைப்பு செய்ய வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.