Perambalur : With subsidy, domestic poultry farms can be set up; Collector information!

Model

பெரம்பலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 2024-2025 – ஆம் ஆண்டிற்கு நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக் கோழிப் பண்ணைகள் 50% மானியம் வழங்கி செயல்டுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, 
கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளியாக இருக்க வேண்டும், பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்கவேண்டும், இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்கவேண்டும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தவரை சார்ந்தவராக இருக்கவேண்டும், 2012-2013 முதல் 2017-2018 வரையிலான கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாட்டு வளர்ப்பில் தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பயன் அடைந்திருக்கக் கூடாது, பயனாளிகள் 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி / கூட்டுறவு வங்கி பயனாளிகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் சான்றுகளை அளிக்கவேண்டும்.

மேற்காணும் தகுதிகளை உடைய பயனாளிகள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய விபரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!