Perambalur: Woman arrested for scamming her to get a job abroad!

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த ஆனந்தன் மனைவி விஜயா (41) த/பெ என்பவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

யுரோப் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பி வைப்பதாகவும் மாதம் ரூ 2,5 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மேற்படி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சிவசங்கர் ஆகியோரிடம் முன்பணமாக தலா ரூ. 2,75,000 வீதம் மொத்தம் 5.5 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக எஸ்.வி டிராவல்ஸ் உரிமையாளர் விஜயா என்பவரின் மீது மாவட்ட குற்ற பிரிவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விஜயா மீது வழக்குபதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் தலைமையிலான போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!