Perambalur: Women’s Self-Help Group Day; Collector provides loan assistance worth Rs. 37.61 crore to 4,706 groups!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னைPerambalur: Women’s Self-Help Group Day; Collector provides loan assistance worth Rs. 37.61 crore to 4,706 groups!யில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக்கடன்கள் வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தியாவிலேயே, முதல் முறையாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன், வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு, மகளிர் முன்னேற்றத்திற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி கடனுதவி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருடந்தோறும் மகளிர் சுயஉதவிக்குழு தினம் என்ற நாளை அறிவித்து, அந்நாளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் இணைப்புக்கான ஆணைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 467 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.37.61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் வழங்கினர். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ் , லப்பைக்குடிகாடு ஜாகிர் உசேன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.